1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் அதிர்ச்சி..! வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு..!

1

சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கியது. இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.

 

இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பிய வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் சாம்பாரில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். உணவில் வண்டுகள் கிடந்ததை அடுத்து, பயணிகள், ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

தரமான உணவை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் முறையிட்டனர். ஆனால், ரயில்வே நிர்வாகம், சாம்பாரில் மிதந்தது சீரக மசாலா தான் எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சாம்பாரில் வண்டுகள் மிதந்ததை பயணிகள் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்துள்ளனர். சீரகத்தில் எப்படி தலை, கால்கள் இருக்கும் என அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Trending News

Latest News

You May Like