காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கல !! ஆனாலும் தற்கொலை செய்த காதல் ஜோடிகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கல !! ஆனாலும் தற்கொலை செய்த காதல் ஜோடிகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கல !! ஆனாலும் தற்கொலை செய்த காதல் ஜோடிகள்
X

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் சவுரிநாதன். இவரது மகள் சோபியா ( 21 ). ஒரு தனியார் காலேஜில் பரதநாட்டியம் இறுதி ஆண்டு படித்து வந்தார். சோபியாவின் வீட்டின் பக்கத்தில் அவர்களுடைய சொந்தக்காரர் ராஜா என்பவரும் வசித்து வந்துள்ளார்.

ராஜாவின் மகன்களில் ஒருவர் ஆனந்தராஜ். அவருக்கு 22 வயதாகிறது. உறவினர்கள் என்பதால் சோபியாவும், ஆனந்த்ராஜூக்கும் காதல் மலர்ந்துள்ளது.. இந்த விஷயத்தை தங்களது வீட்டிலும் இருவரும் சொல்லி உள்ளனர்.

அதற்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவித்தனர். இந்த கொரோனா பிரச்சனை முடிந்ததும் கல்யாணம் செய்து வைத்து விடுவதாக கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை அரூர் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள வனப்பகுதியில் ஆனந்தராஜூம், சோபியாவும் பிணமாக விழுந்து கிடந்தனர்.

அவர்கள் பக்கத்தில் விஷ பாட்டில் இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் சடலங்களை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினர். இதை பற்றின தகவலையும் அவரவர் குடும்பத்தில் தெரியப்படுத்தினர்.

தகவல் கேட்டு 2 தரப்பு பெற்றோருமே கதறி கதறி அழுதனர். இதை பற்றி அரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்களை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

இரு வீட்டிலுமே காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை. இரு குடும்பத்துக்குள்ளும் பிரச்சனைகள் எதுவும் இல்லை. கொரோனா பிரச்சனை முடிந்ததும் கல்யாணம் செய்து வைப்பதாக சொல்லியும் , இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என தெரியவில்லை. உடனே திருமணத்தை செய்து வைக்காததால் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்திருப்பார்களோ என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்

Newstm.in

Next Story
Share it