தன் பெண்ணின் காதலன் அலுவலகத்திற்கு சென்ற பெற்றோர் !! காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்

தன் பெண்ணின் காதலன் அலுவலகத்திற்கு சென்ற பெற்றோர் !! காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்

தன் பெண்ணின் காதலன் அலுவலகத்திற்கு சென்ற பெற்றோர் !! காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்
X

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ஷேக் ரேஷ்மா என்ற பெண் தனியார் மருத்துவமனையில் ஆய்வக பணியாளராக பணியாற்றி வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் , வீட்டில் இருந்து ரேஷ்மா வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ரேஷ்மா வீட்டிற்கு வராததால் , சந்தேகமடைந்த குடும்பத்தினர் அப்துல்லா பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு நேரில் சென்று பார்த்ததும் அவர்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. ஷேக் அப்துல்லா , ரேஷ்மா 2 பேரும் உயிரிழந்து கிடந்தனர். இவர்கள் உயிரிழந்து கிடந்ததை பார்த்ததும் , பெண் வீட்டார் கதறி அழுதனர்.

இந்த காட்சி அங்கிருக்கும் நபர்களை பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தற்கொலையா , அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it