1. Home
  2. தமிழ்நாடு

பங்குனி பௌர்ணமி – இவற்றை செய்தால் பலன்கள் உண்டு..!

Q

பௌர்ணமி எனப்படும் முழு நிலவு தினத்தில் ஒரு இதமான சூழல் நிலவும். அப்படியான ஒரு ஆன்மீக அற்புதம் நிறைந்த தினம் பங்குனி பௌர்ணமி தினம். இந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது குறித்தும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

12 மாதங்கள் கொண்ட தமிழ் மாத வரிசையில் இறுதியான மாதமாக வருவது பங்குனி மாதமாகும். விஞ்ஞான ரீதியில் பார்த்தால் கூட கடுங்குளிர் காலம் நீங்கி உக்கிரமான கோடைகாலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட ஒரு வசந்த காலமாக பங்குனி மாதம் இருக்கிறது. இறைவனுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அதிகம் நடைபெறும் ஒரு மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் ஒரு சிறப்பான நாள் தான் பங்குனி பௌர்ணமி தினம்.

பங்குனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் விருப்பம் போல் அருகிலுள்ள சிவன் அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்க வேண்டும். இத்தினத்தில் கடற்கரையோரம் இருக்கும் புகழ்பெற்ற கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். இதில் கலந்துகொண்டு இறைவனை வணங்குவது உங்களின் தோஷங்களை போக்கும். இந்த பங்குனி பௌர்ணமி தினம் முழுவதும் காலை முதல் மாலை வரை உணவேதும் அருந்தாமல் உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கி, அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்கள் துதித்து வழிபாடு மற்றும் தியானத்தில் ஈடுபடுவது நீங்கள் விரும்பிய பலனை கொடுக்கும்.

தெய்வீக தன்மை மிகுந்த இந்த தினத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு வசதி குறைந்த ஏழை மக்களுக்கு அன்னதானம், நீர்மோர், பழச்சாறு போன்றவற்றை தானம் தருவது உங்களின் பித்ரு தோஷங்கள், கிரக தோஷங்கள் போன்றவற்றை நீக்கும். வசதி படைத்தவர்கள் வேதங்கள் நன்கு கற்றறிந்து பாராயணம் செய்யும் பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம், செருப்பு, குடை போன்றவற்றை தானம் அளிப்பதால் கர்ம வினைகள், அனைத்து வகையான தோஷங்கள் நீங்க பெற்று வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்க பெறுவார்கள்.

Trending News

Latest News

You May Like