ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு !!
ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு !!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ், இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் , இன்று இவர் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் , இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுபாஷின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். பாதுகாப்பு கருதி காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Newstm.in
Next Story