ஓடும் மினி லாரியில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து- பரபரப்பு வீடியோ !!

 | 

அனபர்தி அருகே மினி லாரியில் ஏற்றி வந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் மூவர் படுகாயமடைந்தார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அனபர்தி அருகே உள்ள மெடப்பாடு அருகே பெட்ரோல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த வரியில் உள்ள பிரதான சாலையில் மினி லாரி ஒன்று ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. 

பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது, மினி லாரியில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் மற்ற சிலிண்டர்கள் சிதறின. இந்த சம்பவத்தில், மினி வேனின் பின்பகுதி முழுவதும் சேதமடைந்தது. மேலும், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

accident

மேலும் சிலிண்டர் வெடித்து சிதறும் போது எதிர்திசையில் மினிலாரியை ஒட்டி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலையோரம் விழுந்து காயமடைந்தனர். இதையடுயத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் ஓட்டுநரும், அவருக்கு அருகில் இருந்தவரும் காயமின்றி தப்பினர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மினி வேனில் ஆக்சிஜன் வெடித்த சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP