சோதனை மேல் சோதனை... மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்!

சோதனை மேல் சோதனை... மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்!

சோதனை மேல் சோதனை... மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்!
X

கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் வேறு சில தொந்தரவுகளும் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. வெட்டுக்கிளி படையெடுப்பு, புயல், தற்போது பருவமழை என மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். 

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலம் அதுதான். இதனிடையே வெட்டுக்கிளி படையெடுப்பு, புயல், தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனை வார்டுக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


ஜல்கான் பகுதியில் உள்ள டாக்டர். உல்காஸ் படில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மழை நீர் புகுந்தது. ஒரு அடிக்கு மேல் தண்ணீர் புகுந்ததால் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அவசரம் அவசரமாக வேறுஇடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தெரிவித்த அந்த மருத்துவமனை மருத்துவர் பிரமோத், அங்கு மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் இருந்தார்கள் என்றும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7-8 நோயாளிகள் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றம் செய்யப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it