1. Home
  2. தமிழ்நாடு

ஊரடங்கு நீடித்தால் 4 கோடி இந்தியர்களின் செல்போனுக்கு ஆபத்து! ஏன் தெரியுமா?

ஊரடங்கு நீடித்தால் 4 கோடி இந்தியர்களின் செல்போனுக்கு ஆபத்து! ஏன் தெரியுமா?


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14 வரை இருந்த நிலையில் தற்போது மே 3 வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீடித்தால் இந்தியாவில் 4 கோடி மொபைல் போன்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி  உள்ளது. தற்போதைய கணக்குப்படி இந்தியாவில் 2.5 கோடி பேரின் மொபைல் போன்கள் பழுதாகி உள்ளன என்றும்,  ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் இல்லாததால் இயங்காமல் இருப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.


மே 3ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் இந்தியாவில் 4 கோடி பேர் மொபைல் போன்கள் ரிப்பேர் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ரீசார்ஜ் கடைகள் மற்றும் மொபைல் ரிப்பேர் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like