சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா.. தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்..!

சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா.. தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்..!

சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா.. தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்..!
X

சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 940-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளில், தெற்காசியாவில் இருந்து சென்ற சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் அடுக்கடுக்காக கட்டப்பட்ட விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த தொழிலாளர்களில் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 940-க்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்ட விடுதிகள் அனைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் வேகமாக பரவி வருகிறது. 

newstm.in 

Next Story
Share it