1. Home
  2. தமிழ்நாடு

உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் !! காவல் ஆணையர் எச்சரிக்கை

உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் !! காவல் ஆணையர் எச்சரிக்கை


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சென்னை கீழ்பாக்கத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மருத்துவரின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்சு மீதும், அதில் இருந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் கல்வீச்சு நடந்துள்ளது.  இதில் அவர்கள் காயமடைந்து உள்ளனர்.  இதன்பின்பு அந்த பகுதியில் இருந்து மருத்துவரின் உடலை வேறிடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களான 20 பேர் கைது செய்யப்பட்டனர்.  90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர் உடல் அடக்கம் குறித்து ஏற்கனவே தாமாக முன் வந்து நீதிமன்றம் விசாரணையை எடுத்து , தமிழக அரசும் , காவல் துறையும் பதிலளிக்க வேண்டும் என உத்திரவிட்டது.இந்நிலையில் சென்னை கமிஷ்னர் இந்த உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Trending News

Latest News

You May Like