1. Home
  2. தமிழ்நாடு

குட்டி காஷ்மீர் போல் மாறிய ஊட்டி!

1

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிப் பொழிவு காணப்படும். இதனால், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறை பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மைனஸ் ஒன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள புற்களில் இருந்த நீர் அனைத்தும் உறைந்து, புல்வெளிகளின் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போன்று பனி படர்ந்து ரம்மியமாக காணப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு குட்டி காஷ்மீர் போன்று காட்சியளித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனிப்பொழிவு உள்ள இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

தொடர்ந்து, உறைபனிப் பொழிவால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி படர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 


 


 

Trending News

Latest News

You May Like