1. Home
  2. தமிழ்நாடு

அச்சச்சோ..! இந்த வருஷத்துக்குள்ள கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைக்காது!

அச்சச்சோ..! இந்த வருஷத்துக்குள்ள கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைக்காது!


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், ஆகஸ்ட் 15 முதல் இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள  covaxin TM மருந்தை  மனிதர்கள் மீது சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளதால், பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

'கோவேக்சின், இசட்ஒய்கோவ்-டி  போன்ற 11 தடுப்பு மருந்துகள் மனித சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன என்று அவர்கள் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த மருந்துகளில் எதுவும் இந்த வருட இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவை நடைமுறைக்கு வருவதற்கு எப்படியும் அடுத்த ஆண்டு ஆகிவிடும் என்று மத்திய அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like