1. Home
  2. தமிழ்நாடு

ட்ரம்ப் வரலைன்னாலும் ஆன்லைன் விவாதம் நடக்கும்! அமெரிக்கர்களை கவரும் ஜோ பைடன்!

ட்ரம்ப் வரலைன்னாலும் ஆன்லைன் விவாதம் நடக்கும்! அமெரிக்கர்களை கவரும் ஜோ பைடன்!


அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒவ்வொரு முறையும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையே மூன்று நேரடி விவாதங்களும், துணை அதிபர் வேட்பாளர்களுக்கிடையே ஒரு நேரடி விவாதமும் நடத்தப்படுவது வழக்கம்.

முதலாவது அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் கடந்த வாரம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. அதில் ட்ரம்ப் கலந்து கொண்டார். அதன் பிறகு கடந்த வியாழனன்று அதிபர் ட்ரம்ப்-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது, அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ள விவாதத்தில் பங்கேற்க தயார் என்று ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் துணை அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் நேற்று கண்ணாடி மறைப்புகள் வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஒருவேளை மைக் பென்ஸ் அல்லது கமலா ஹாரிஸுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டிருந்தால் மற்றவருக்கு பரவாமல் தடுக்கும் ஏற்பாடாக இது செய்யப்பட்டிருந்தது.

அதிபர் ட்ரம்ப்-க்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இரண்டு வாரத்திற்குள், இரண்டாவது விவாதம் நடைபெற வேண்டியுள்ளதால், அதிபர் தேர்தல் விவாத ஆணையம், மாற்று ஏற்பாடாக அதே நாளில் ஆன்லைன் விவாதம் நடத்த முடிவு செய்தது. ஆன்லைன் விவாதத்திற்கு ஜோ பைடன் தரப்பிலிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆனால், ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆன்லைன் விவாதத்திற்கு ட்ரம்ப் ஒப்புக் கொள்ளாத காரணத்தால் இரண்டாவது விவாதம் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ட்ரம்ப் வராவிட்டால், அதே நாளில் அமெரிக்க வாக்காளர்களின் கேள்விகளை ஜோ பைடன் எதிர்கொள்வார் என்று அவருடைய தேர்தல் குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like