26ம் தேதி அட்சய திரிதியை! கதறியழும் நகை வியாபாரிகள்!!

26ம் தேதி அட்சய திரிதியை! கதறியழும் நகை வியாபாரிகள்!!

26ம் தேதி அட்சய திரிதியை! கதறியழும் நகை வியாபாரிகள்!!
X

ஒவ்வொரு வருடமும் சித்திரை  மாதத்தில் வருகிற வளர்பிறை அமாவாசை தினத்தையடுத்து வரும் திரிதியை நாளை அட்சய திரிதியை நாளாக கொண்டாடி வருகிறோம். சமீப காலங்களாக நகைக் கடை அதிபர்களின் விளம்பர யுக்தியில், அட்சய திருதியையன்று தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த வாரம் முழுவதுமே முன்பதிவு செய்து பணத்தை வாடிக்கையாளர்களிடம் பெற்றுக் கொண்டு, அட்சய தினத்தன்று நகையைக் கொடுக்கும் திட்டங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி நகைக்கடைகள் கண ஜோராக இத்தனை வருடங்களாக கல்லாக் கட்டி வந்தன. 

அட்சய திரிதியை அன்று விலையைப் பற்றி கவலைப்படாமல் பொட்டு தங்கமாவது வாங்க வேண்டுமென மக்களும் முண்டியடித்து வாங்கி வந்தனர். 

ஆனால் தற்போது அட்சய திரிதியை லாக்டவுன் சமயத்தில் வருவதால் நகை வியாபாரிகளுக்கு கதறியழுகின்றனர். பெரிய கடைகளில் கூட்டமிருக்கும் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள சிறிய நகைக் கடைகளிலும் அன்று வாங்குவார்கள். இந்த மிகப்பெரிய வியாபார வாய்ப்பு பறிபோனது என்று நகைக்கடை அதிபர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். கடந்த 2019ல் அட்சய திரிதியை அன்று 33 டன் தங்கம் வியாபாரமானது குறிப்பிடத்தக்கது.

newstm.in


 

Tags:
Next Story
Share it