1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாளில் 18 தெருக்களுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

ஒரே நாளில் 18 தெருக்களுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!


மதுரையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 18 தெருக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பே கொரோனா பரவல் அதிகரித்து விட்டாலும் கூட வாக்குப்பதிவு காரணமாக நடவடிக்கை எடுக்க அந்தந்த பகுதிகளில் அதிகாரிகள் காத்திருந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என வதந்தி பரவிய நிலையில் அதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்தது.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மட்டும் கட்டுப்படுத்தப்படும் என்றும், முழு பொதுமுடக்கம் இருக்காது எனவும் விளக்கம் அளித்தது. இந்நிலையில் மதுரையில் நோய் அதிகம் பாதித்த தெருக்களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று ஒரே நாளில் 18 தெருக்களுக்கு மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். வாகனங்களும், மக்களும் செல்லாதவாறு அந்த தெருக்களில் தகரங்களை வைத்து மாநகராட்சி ஊழியர்கள் அடைத்தனர்.

தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், பால், மருந்து, மளிகை, காய்கறிகள் ஆகியவற்றை மாநகராட்சி ஊழியர்களே வாங்கிக் கொடுக்கும் பழைய நடைமுறை தொடங்கியது.

தொற்று பரவிய ஒரு ஹோட்டல், ஒரு வங்கி உட்பட சில நிறுவனங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பேருந்து மட்டுமின்றி, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் செல்வோரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like