ஷகிலா படத்தை வாங்க போட்டிப் போடும் ஓடிடி தளங்கள்!

ஷகிலா படத்தை வாங்க போட்டிப் போடும் ஓடிடி தளங்கள்!

ஷகிலா படத்தை வாங்க போட்டிப் போடும் ஓடிடி தளங்கள்!
X

கேரளாவில் முன்னணி நடிகர்களின் படங்களையே ஓரங்கட்டியவர் நடிகை ஷகிலா. குடும்பத்தின் வறுமை காரணமாக கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்த ஷகிலாவின் படங்கள் வசூல் சாதனை படைக்கத் தொடங்கின. இதனால் பெரிய ஹீரோக்களே அஞ்சினர். 

தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். ரிச்சா சத்தா ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் உருவாகும் இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் படக்குழு ஓடிடி தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டனர். அனைத்து மொழி உரிமத்தையும் செய்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 70 கோடி விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it