1. Home
  2. தமிழ்நாடு

பெண்களை விட ஆண்கள் அதிகம்: ஆய்வில் தகவல்..!

பெண்களை விட ஆண்கள் அதிகம்: ஆய்வில் தகவல்..!


இந்தியாவில் ஓடிடி தளத்தின் வாயிலாக திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 35 கோடியில் இருந்து 50 கோடி வரை அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆண் பார்வையாளர்கள் எண்ணிக்கை, பெண்களை விட இருமடங்கு அதிகரித்துள்ளதும் 'பெட்வே இன்சைடர்' எனும் நிறுவனத்தின் ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
11 Must Watch TV Shows on Amazon Prime in India
அண்மைக்காலமாக இந்தியாவில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என ஓடிடி தளங்கள் வாயிலாக வீடியோக்கள் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, 2023ல் 35 முதல் 50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில், 15 வயதிலிருந்து 30 வயது வரையிலான இளவயதினரே ஓடிடி தளங்களை அதிகம் பார்க்கிறார்கள். பெண்களை பொறுத்தவரை 25 முதல் 35 வயது பிரிவினர் அதிகம் பார்வையிடுகிறார்கள்.

இருப்பினும், மொத்த நுகர்வில் ஆண்களை விட பெண்கள் 50 சதவீதம் குறைவாகவே இருக்கின்றனர். கொரோனா காலத்தில் ஓடிடி பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 4.3 கோடியாக உள்ளது. இதை அடுத்து, அமேசான் பிரைம் 1.7 கோடி சந்தாதாரர்களையும், நெட்பிளிக்ஸ் 50 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டிருக்கின்றன.

ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் அதிகரிப்பு, கிராம பகுதிகளிலும் வேகமான இன்டர்நெட் வசதி ஆகியவை காரணமாக ஓடிடி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Trending News

Latest News

You May Like