1. Home
  2. தமிழ்நாடு

இனி ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டறியலாம்!!

இனி ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டறியலாம்!!


ஒமைக்ரான் தொற்றை 2 மணி நேரத்தில் கண்டறியும் சோதனை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ஐசிஎம்ஆர் வடிவமைத்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் முதல்முதலாக ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவா் கா்நாடகத்தில் கண்டறியப்பட்டனா்.

இதையடுத்து, ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இனி ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டறியலாம்!!

மும்பையில் 3 பேருக்கும், பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சியில் 4 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் அந்த எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றை 2 மணி நேரத்தில் கண்டறியும் சோதனை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ஐசிஎம்ஆர் வடிவமைத்துள்ளது. அசாமின் திப்ருகாரில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கண்டுபிடிப்பு சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.

இனி ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டறியலாம்!!

இப்போதுள்ள சோதனை முறைகளில் ஒமைக்ரான் தொற்றை உறுதிப்படுத்த 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் நிலையில், 2 மணி நேரத்தில் சோதனை முடிவை இதில் கண்டறியலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like