திருச்சி பெண்களுக்கான அறிவிப்பு !!

திருச்சி பெண்களுக்கான அறிவிப்பு !!

திருச்சி பெண்களுக்கான அறிவிப்பு !!
X

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்பை குறைப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியாவிலும் கொரோனா பாதிப்பானது 26 ஆயிரத்தை கடந்து விட்டது.

இதற்காக பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே போகாமல் , அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் அரசு உத்தரவிட்ட நேரத்தில் சென்று வருகின்றனர்.

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த ஊரடங்கின் போது தின தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் செல்போன்கள் மட்டும் தான் பொழுதுபோக்காக இருக்கிறது.

ஒரு சில காவல் நிலையத்தில் , என் கணவர் என்னை தாக்குகிறார் என்று மனைவிகள் புகார்கள் வந்தன. இந்நிலையில் இந்த ஊரடங்கின் போது பெண்கள்  யாராவது குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் , உதவி எண் 181 ல் புகார் அளிக்கலாம். மற்றும் காவல் துறை உதவி எண் 1091 - லும் புகார் தெரிவிக்கலாம். புகாரை மாவட்ட பாதுகாப்பு அலுவலர் மற்றும் குடும்பநல ஆலோசகர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அரசு அறிவித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it