Logo

அதிரடி அறிவிப்பு! தடுப்பூசி போட்டுக் கொண்டால் உணவு விடுதிகளில் தள்ளுபடி!!

 | 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு புதுச்சேரி உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வீசிவருவதால் மக்கள் பலரும் தடுப்பூசி பக்கம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 16ஆம் தேதி மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊடகத்துறையினர் முன்களப்பணியாளர்கள் பிரிவில் வருவர்.

பின்னர் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கும், 45 வயதுக்கு அதிகமான இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது. அதன்பிறகு 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

விரைவில் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நோய் தொற்று அதிகரிப்பதால் தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே மக்களுக்கு தடுப்பூசி குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு சிறப்பு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு புதுச்சேரி உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP