1. Home
  2. தமிழ்நாடு

ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை !! முதலமைச்சருடன் ஆலோசனை செய்த பின்பு மருத்துவ நிபுணர்கள் பேட்டி

ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை !! முதலமைச்சருடன் ஆலோசனை செய்த பின்பு மருத்துவ நிபுணர்கள் பேட்டி

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவ நிபுணா்கள் குழுவைச் சேர்ந்த சிலருடன் காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி கருத்துகளைக் கேட்டறிந்தார். இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர் ;

கொரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு 7 வது முறையாக தமிழக முதல்வர் பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் தரப்பில சில பரிந்துரைகளை முன் வைத்துள்ளோம்.

ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை !! முதலமைச்சருடன் ஆலோசனை செய்த பின்பு மருத்துவ நிபுணர்கள் பேட்டி

தற்போது சென்னையில் நாள் ஒன்றுக்கு கொரோனா பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கரோனா பரிசோதனை 13 ஆயிரமாக உள்ளது.கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைக்கவில்லை.

கொரோனாவுக்கு பொதுமுடக்கமே தீர்வல்ல என்றும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. பொது போக்குவரத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். முழு ஊரடங்கு என்பது கோடாளியை எடுத்து கொசுவை கொல்வது போன்ற கதை. ஒரு கட்டத்துக்கு மேல் பயனளிக்காது. மக்கள் தனிமைப்படுத்திக் கொள்வது, மாஸ்க் அணிவது மட்டுமே தீர்வு தரும் என கூறினார்கள்

Newstm.in

Trending News

Latest News

You May Like