பிரபல நடிகைக்கு மட்டுமல்ல.. கணவர், தாய், தந்தைக்கும் கொரோனா.. சோகத்தில் திரையுலகம் !

பிரபல நடிகைக்கு மட்டுமல்ல.. கணவர், தாய், தந்தைக்கும் கொரோனா.. சோகத்தில் திரையுலகம் !

பிரபல நடிகைக்கு மட்டுமல்ல.. கணவர், தாய், தந்தைக்கும் கொரோனா.. சோகத்தில் திரையுலகம் !
X

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 8.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 22,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள், போலீசார் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வங்காள நடிகையான கோயல் மாலிக் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் மட்டுமின்றி அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான 75 வயதுடைய ரஞ்சித் மாலிக், தாயார் தீபா மாலிக் ஆகியோருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நடிகை கோயல் மாலிக்கின் கணவரும், தயாரிப்பாளருமான நிஸ்பால் சிங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகை கோயல் மாலிக் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நடிகை கோயல் மாலிக் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in 


 

Next Story
Share it