1. Home
  2. தமிழ்நாடு

நாட்டுக்காக அல்ல, சுயநலத்திற்காக சதம் அடிப்பார்கள்.. இந்திய வீரர்களை சாடிய பாக். முன்னாள் கேப்டன்.!

நாட்டுக்காக அல்ல, சுயநலத்திற்காக சதம் அடிப்பார்கள்.. இந்திய வீரர்களை சாடிய பாக். முன்னாள் கேப்டன்.!


இந்திய அணி வீரர்கள் அணிக்காக சதம் அடிக்காமல், தனக்காகவே சதம் அடிப்பார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஷமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார். 

உலகம் முழுவதும் ஊரடங்கை சந்தித்து வரும் இவ்வேளையில் விளையாட்டு உலகமே முடங்கி உள்ளது. வீரர்கள் விளையாட முடியாததால் தங்கள் வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஷமாம் உல் ஹக் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ரமீஷ் ராஜாவுடன் யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய பேட்ஸ்மென்களே ஆதிக்கம் செலுத்துவர் என்று  இன்ஷமாம் கூறினார்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 30, 40 ரன்கள் அடித்தாலும் அது அணிக்காக எடுத்த ரன்களாக இருக்கும், ஆனால் இந்திய வீரர்கள் சதம் விளாசி அசத்துவார்கள். அது அவர்களின் சுயநலத்திற்காகவே இருக்கும். இது தான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.

மேலும், 1992 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்ற தருணம் தொடர்பாக நினைவுகளை பகிர்ந்துகொண்டார். தற்போதைய பிரதமரும், அப்போதையை பாகிஸ்தான் அணி கேப்டனுமான இம்ரான் கான் டெக்னிக்கல்லாக ஒரு நல்ல கேப்டனாக இல்லாவிட்டாலும், அணியில் உள்ள ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் எப்படி முழு ஆட்டத்திறனையும் களத்தில் பெற முடியும் என்ற யுக்தியை நன்கு தெரிந்து வைத்திருப்பவர் என கூறினார்.
 
இன்ஷமாம் உல் ஹக் 1991 முதல் 2007 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே பாகிஸ்தான் வீரர் இன்ஷாம் உல் ஹக் தான். இவரது கேப்டன்ஷிப்பில் பாகிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 31 டெஸ்ட், 87 ஒருநாள், ஒரு டி 20 போட்டிகளில் இன்ஷமாம் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

newstm.in 

Trending News

Latest News

You May Like