தடுப்பூசியே தேவையில்லை !! கொரோனா வைரஸ் தானாகவே சரியாகும் !! உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

தடுப்பூசியே தேவையில்லை !! கொரோனா வைரஸ் தானாகவே சரியாகும் !! உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

தடுப்பூசியே தேவையில்லை !! கொரோனா வைரஸ் தானாகவே சரியாகும் !! உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி
X

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனிதர்களை வேட்டையாடி வரும் நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகளாகக் கூடும் என பல விஞ்ஞானிகளும் தெரிவித்தபடி இருக்கிறார்கள். 720 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த உலகிலுள்ள அத்தனை பேருக்கும் தடுப்பு மருந்தைக் கொண்டு சேர்க்க மேலும் இரண்டு ஆண்டுகளாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அதற்கு முன்பாக வைரஸை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பற்றி உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் நேர்காணலில் கூறுகையில் ;

ப்ளூ பெருந்தொற்று ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக பரவியது. 1895 ஆம் ஆண்டில் அது முடிவுக்கு வந்தது. ஒட்டு மொத்த மக்களும் ப்ளூ காய்ச்சலுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றதால் அந்த நோய் முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறப்பு வீதம் என்பது 0.2 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என்றும் , 50 முதல் 59 வயதுக்குட்பட்டோர் 8 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மேலும் 60 வயதுக்கு உட்பட்ட நபர்களை ஊரடங்கை தளர்த்தி இயல்பாக வாழ்க்கையை வாழ விடுவதால் அவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் , இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வருவார்கள்.

அவர்கள் உடலில் அந்த நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் காரணமாக 99.7 சதவீதம் அளவுக்கு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவார்கள். எனவே இந்த நோய் ஒழியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it