1. Home
  2. தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் இல்லை... ஆனாலும் பணியாளர்களுக்கு வேலை!

டாஸ்மாக் கடைகள் இல்லை... ஆனாலும் பணியாளர்களுக்கு வேலை!


ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 183 கடைகளிலும் இருந்த மதுபானங்கள் 5 இடங்களில் பிரித்து வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இந்நிலையில் திருச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராஜேந்திரன் என்பவர், கடந்த 21ஆம் தேதி வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். 


மதுக்கடைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு  வேண்டும் என்றால் தனியார் செக்யூரிட்டி நிறுவன ஆட்களை பணியமர்த்தலாம் என்றும் அதைவிடுத்து தற்காப்பு பயிற்சி ஏதுமில்லாத, எவ்வித ஆயுதமும் கையாள அனுமதி இல்லாத டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த கூடாது என பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் மதுபானங்களுக்கு அந்தந்த கடை ஊழியர்களே பொறுப்பு என்பதால் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like