இல்லை... இல்லை...இல்லவே இல்லை... பதறிய திமுக அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அடுத்த கல்வியாண்டில் (2025-26) 500 அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கல்வியை தனியார் மயமாக்கும், தேசிய கல்விக் கொள்கையை மறை முகமாகத் திணிக்கும் முயற்சியாகும்.
இது ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும்.
500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், "அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கவில்லை. பத்திரிகைகளில் வெளியான செய்தி தவறானது. செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டதைப் பதிவு செய்வதா? தொடர்ந்து தவறான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்தே சோர்வாகிவிட்டேன்" என்றார்.