1. Home
  2. தமிழ்நாடு

நினைத்த போதெல்லாம் இனி சிலிண்டர் புக் பண்ண முடியாது! புதிய கட்டுப்பாடு!

நினைத்த போதெல்லாம் இனி சிலிண்டர் புக் பண்ண முடியாது! புதிய கட்டுப்பாடு!


ஒரு சிலிண்டர் வாங்கிய பின் அடுத்த 15 நாட்களுக்கு பிறகுதான் மற்றொரு சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால், அதிகமாக சமையல் என சிலிண்டர் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முன்பு கேஸ் சிலிண்டர் எப்போது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்ற வசதி இருந்த நிலையில், தற்போது ஒரு சிலிண்டர் பெற்ற 15 நாட்களுக்கு பிறகு தான் அடுத்த சிலிண்டரை பதிவு செய்யமுடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 


சென்னையில் 250 கியாஸ் வினியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஏஜென்சியிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 சிலிண்டர் வரை சப்ளை செய்யப்படுகிறது. அதன்படி தினமும் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் சிலிண்டர்கள் வரை வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like