கொரோனா பயம் இல்லை.. சென்னையில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம் !
கொரோனா பயம் இல்லை.. சென்னையில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம் !

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் 6-ம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு கோரதாண்டவம் ஆடி வருகிறது. நாள்தோறும் சென்னையில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கண்டறியப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு முடிந்த மறுநாளான நேற்று சாலைகளில் வாகனங்கள் பெருக்கெடுத்து ஓடியதை பார்க்க முடிந்தது. பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்களின் படையெடுப்பு இருந்தது.
மோட்டார் சைக்கிள்கள், கார்கள் அதிகளவில் சாலையில் ஆர்ப்பரித்து செல்வதை பார்க்க முடிந்தது.
அதேபோல தெருக்களிலும், கடைகளில், வீதிகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் கூட்டம் காணப்பட்டது. மக்கள் கொரோனாவின் ஆபத்தை உணராமல் விதியில் நடமாடுவது சுகாதாரத்துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
newstm.in