முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
X

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ; கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து களத்தில் முன்களப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 55% ஆக உள்ளது. பொதுமக்கள் இந்த வைரஸை கண்டு பதட்டமடைய வேண்டாம் அதே நேரத்தில் கண்ணும் கருத்துமாக மிக கவனமாக இருக்க வேண்டும்.

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம். கொரோனா ஒழிவது கடவுளுக்குத்தான் தெரியும் என்ற முதல்வரின் யதார்த்தமான கருத்தில் என்ன தவறு ? யதார்த்தமான கருத்தை முதல்வர் கூறியதால் எதிர்க்கட்சி தலைவருக்கு ஏன் கோபம் வருகிறது அமைச்சர் விஜபாஸ்கர் கேள்வி

Newstm.in

Next Story
Share it