1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி என அறிவிப்பு !

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி என அறிவிப்பு !


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. பாமகவின் இந்த திடீர் அறிவிப்பு, அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டம் வட மாவட்டத்தை சேர்ந்தவை. இங்கு வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர்கள் ஓட்டு எங்களுக்கு தான் என்று அரசியல் கட்சி நடத்தி வரும் பாமக, கூட்டணி கட்சியுடன் கரம் கோர்த்து போட்டியிட்டால், குறைந்த இடங்கள் தான் கிடைக்கும். அதுவே தனித்து போட்டியிட்டால் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தலாம் என்ற கணக்கில் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி என அறிவிப்பு !

இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தேர்தலில் பாமக வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இணைய வழியில் நடந்தது.

இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி என அறிவிப்பு !

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து செப்டம்பர் 15ஆம் தேதி (இன்று), 16ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலை குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like