1. Home
  2. தமிழ்நாடு

இந்த ஆண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு அமல்..! அதிர்ச்சியில் மருத்துவ மாணவர்கள்..!

1

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விண்ணப்பிக்க வருகிற 10-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல் படுத்தப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

Exam

நெக்ஸ்ட் தேர்வு படி 1 மற்றும் படி 2 என இரண்டு படிகளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகளை கொண்டது. இதில் கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும்.

Next Exam

இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும். வரும் 28-ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய அரசு இந்த தேர்வை கைவிட வேண்டும் என்று ஏற்கனவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like