செல்போன் நெட்வொர்க் மாற்றுவது குறித்து ட்ராய் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இனி மூன்றே நாட்களில் செல்போன் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம்! டிராயின் அதிரடி அறிவிப்பு! செல்போன் எண்ணை மாற்றாமல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியான மொபைல் எண் போர்டபிலிட்டிக்கான (எம்.என்.பி) புதிய விதிகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.
 | 

செல்போன் நெட்வொர்க் மாற்றுவது குறித்து ட்ராய் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

செல்போன் எண்ணை மாற்றாமல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியான மொபைல் எண் போர்டபிலிட்டிக்கான (எம்.என்.பி) புதிய விதிகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.

டிராயின் இந்த புதிய அறிவிப்பில், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு செல்போன் எண்ணை மாற்றிக் கொள்வதற்கு ஆகும் கால அவகாசத்தை 15ல் இருந்து 3 முதல் 5 நாட்களாக ட் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அசாம், வடகிழக்கு மாகாணங்கள், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு டிராயின் இந்த புதிய விதிகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

 செல்போன் நெட்வொர்க் மாற்றுவது குறித்து ட்ராய் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

ஒவ்வொரு முறையும் செல்போன் நெட்வொர்க்கை மாற்றுவதற்கான கட்டணம்  ரூ. 6.46 
வசூலிக்கப்படும். ஒருவேளை நெட்வொர்க்கை மாற்றும் எண்ணத்தைக் கைவிடும் சூழல் ஏற்பட்டால் நெட்வொர்க் மாற்றும் விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துக் கொள்ளலாம். மேலும் நெட்வொர்க்கை மாற்றுவதற்கு விண்ணப்பித்த நாள் மட்டும் 4 மணி நேர சேவை இடையூறுகள் ஏறபடும் எனவும் டிராய் தனது புதிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

உங்களுடைய நெட்வொர்க்கை மாற்றும் எண்ணத்தில் இருந்தீர்கள் என்றால் நெட்வொர்க் மாற்றுவதற்கான படிநிலைகள் பின்வருமாறு பின்பற்றலாம். 

செல்போன் நெட்வொர்க் மாற்றுவது குறித்து ட்ராய் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

உங்கள் செல்போனில் இருந்து PORT என டைப் செய்து ஒரு சிறிய இடைவெளி விட்டு உங்களுடைய 10 இலக்க செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். யுபிசி எனப்படும் தனித்துவமான போர்டிங் குறியீட்டு எண் உங்களுடைய மொபைலுக்கு குறுஞ்செய்தியாக உடனடியாக வந்து சேரும்.  இந்த குறியீட்டு எண் ஜம்மு காஷ்மீர், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் 30 நாட்களும், நாட்டின் பிற இடங்களுக்கு 4 நாட்களுக்கும் செல்லுபடியாகும். 

தற்போது எந்த நிறுவனத்திற்கு உங்கள் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமோ அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு சென்று போர்ட்டிங் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டபின் புதிய சிம்கார்டு உங்களுக்கு வழங்கப்படும்
நெட்வொர்க் மாறுதல் வேண்டாம் என முடிவு செய்தால் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றுங்கள்.
உங்கள் மொபைலில் இருந்து CANCEL என டைப் செய்து ஒரு சிறிய இடைவெளிவிட்டு 10 இலக்க மொபைல் எண்ணை பதிவிட்டு 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் உங்களுடைய போர்ட்டிங் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP