சென்னையில் , ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் , தளர்வுகள் அறிவிப்பு !! தமிழக அரசு..

சென்னையில் , ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் , தளர்வுகள் அறிவிப்பு !! தமிழக அரசு..

சென்னையில் , ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் , தளர்வுகள் அறிவிப்பு !! தமிழக அரசு..
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 1300 - யை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு பாதிக்கு , பாதியாக உள்ளது.

தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தும் , அவ்வப்போது சில தளர்வுகளை அறிவித்தும் வருகிறது. இந்நிலையில் , சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இரவுடன் முழுப் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் , தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவுடன் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், திங்கள்கிழமை காலை முதல் கடைகள் திறப்பு குறித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்கலாம்.

சென்னையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை (பார்சல் மட்டும்) தேநீர் கடைகள் திறந்திருக்கலாம். வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it