மின் கட்டணத்தை தெரிந்து கொள்ள புதிய வசதி !! என்ன தெரியுமா ?
மின் கட்டணத்தை தெரிந்து கொள்ள புதிய வசதி !! என்ன தெரியுமா ?

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.
அதே நேரத்தில் மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர், ஆகவே மின் தேவை அதிகரித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பழைய மின் கட்டணத்தை கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்வாரியம் கூறியது. இந்நிலையில் வீட்டுமின் பயனாளர்கள் கட்டண விவரங்களை இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://tangedco.gov.in என்ற தளத்தில் சென்று அவர்கள் மின் கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதில் ஏதேனும் வித்தியாசம் தென்படின், உதவி பொறியாளர் அலுவலகத்தை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in