வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி?- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 | 

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கேராளவில் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் ரயில் நிலையங்கள், சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது.

குடியிருப்புகளில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிப்பின்னர் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாறக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று வீசும் கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. 

 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP