வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது.. கனமழை எச்சரிக்கை !!

 | 

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜூலை 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்கிறது. அதேபோல் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. நேற்று இரவு தொடர்ந்து 2 மணி நேரம் கனமழை கொட்டியதால் சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 

சென்னையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஜூலை 21ஆம்தேதி புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. 

இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், இது வலுவடைய வாய்ப்பு இல்லை. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவே மறைந்துவிடும்.

இந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வாய்ப்பு குறையும். அதேநேரத்தில், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். மேலும், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தப் பகுதியில் மீனவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும், எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP