விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது.. சாத்தான்குளம் சம்பவம்.. ரஜினிகாந்த் ஆத்திரம் !

 | 

சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாகவே முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

newstm.in 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP