நீட் விலக்கு: ஆளுநரை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

 | 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு..ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

தமிழகத்தில்நீட்தேர்வை ரத்து செய்து, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவதற்காக முதல்வர் மு..ஸ்டாலின் கொண்டுவந்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்கு மசோதா உடனே அனுப்பப்பட்டது. இந்நிலையில்சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார்.

நீட் தேர்வு சட்ட மசோதா கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்தார். சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்த ஒருசில தினங்களிலேயே ஆளுநரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

cm

பின் புதிய ஆளுநராக ஆர். என் ரவி பதவியேற்றார். பதவியேற்ற பின் நீட் விலக்கு மசோதா குறித்து முதன் முறையாக முதலமைச்சர், ஆளுநரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பொழுது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் குறித்து விளக்கம் பெறப்பட்டதாகவும், மேலும், கொரோனா தொற்று தாக்கம் குறித்தும், தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் தனி செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP