நிர்வாண வீடியோ... கெஞ்சிய சிறுமி... உடலில் தீ வைத்துக்கொண்ட கொடூரம்!

நிர்வாண வீடியோ... கெஞ்சிய சிறுமி... உடலில் தீ வைத்துக்கொண்ட கொடூரம்!

நிர்வாண வீடியோ... கெஞ்சிய சிறுமி... உடலில் தீ வைத்துக்கொண்ட கொடூரம்!
X

வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் குளிக்கும் போது அதே பகுதியே சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சிறுமியை ஆசைக்கு இணங்குமாறு மூவரும் வற்வுறுத்தியுள்ளனர். ஆனால், வீடியோ இருப்பதை சிறுமி நம்பவில்லை. இதனையடுத்து நிர்வாண வீடியோவை சிறுமிக்கு தெரிந்த நபருக்கு அனுப்பி  பார்க்கச் சொல்லியுள்ளனர். அதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி வீடியோவை டெலிட் செய்துவிடுமாறு மூவரிடமும் கெஞ்சியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it