பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் !!

பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் !!

பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் !!
X

மகாராஷ்டிராவில் பால்கர் பகுதியில் சாமியார்கள் 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஏன் வாய்திறக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டவர்கள் இந்து சாமியார்கள் என்பதால் காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது என்றும் தனது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அர்னாப் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி. இவரது மனைவி சாமியா கோஸ்வாமி. இவர்கள் நேற்று இரவு பணி முடித்த பின் ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டுற்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது , அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் , பாட்டில்களையும் வீசியுள்ளனர்.

இது குறித்து போலிசார் வழக்குபதிவு செய்து தாக்குதல் நடத்திய 2 பேரை கைது செய்துள்ளனர். இது காங்கிரஸ்காரர்களின் வேலை தான் எனவும் தனக்கும் , தனது குடும்பத்திற்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சோனியா காந்தியே காரணம் என அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Newstm.in

Next Story
Share it