நளினியை நேரில் சென்று சந்தித்துக் கட்டியணைத்துக் கொண்டவர் என் சகோதரி பிரியங்கா - ராகுல் காந்தி..!
வயநாடு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், சகோதரியுமான பிரியங்கா காந்திக்காக வாக்கு சேகரிக்க, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் நேற்று (நவ.03) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் :
“எங்கள் தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நளினியை நேரில் சென்று சந்தித்துக் கட்டியணைத்துக் கொண்டவர் என் சகோதரி பிரியங்கா காந்தி. அவரை சந்தித்த பிறகு, என்னிடம் வந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அப்போது, நளினிக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறினார். நானும் அதற்கு ஆறுதல் தெரிவித்தேன்.”
பிரியங்கா காந்தி என்னைவிட மனிதநேயம் மிக்கவர். இதுபோன்ற அன்பு மற்றும் அரவணைப்பு அரசியல்தான் இந்தியாவுக்குத் தேவை” என தெரிவித்தார்.