விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் – ரஜினி..!
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் – அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகள்; விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு நடிகர் ரஜினி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ரொம்ப நன்றி, ரொம்ப நன்றியெனப் பதில் அளித்துவிட்டு சென்றார் ரஜினி.
.png)