வில்லங்க இயக்குநரிடம் கூட்டணி சேரும் இசைஞானி!

வில்லங்க இயக்குநரிடம் கூட்டணி சேரும் இசைஞானி!

வில்லங்க இயக்குநரிடம் கூட்டணி சேரும் இசைஞானி!
X

தமிழ் சினிமாவில் இசையின் ராஜாவாக திகழ்ந்த இளையராஜா தற்போது குறிப்பிட்ட படங்களுக்கே இசையமைத்து வருகிறார். அந்த வகையில், மிருகம், உயிர், சிந்துசமவெளி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சாமியின் அடுத்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார்.

புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர்  மஜித் மஜீதி இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த படம் “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்”. உலகம் முழுவதும் பெறும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை சாமி தமிழில் இயக்கியுள்ளார். இதுவரை தான் இயக்கிய படங்கள் சன்னுடைய அடையாளமல்ல என்றும், இனி இயக்கப்போகும் படங்கள் தான் தன்னை அடையாளப்படுத்தும் என அவர் கூறியுள்ளார். 


படத்திற்கு “அக்கா குருவி” என பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கிறார். படவிழாவில் இயக்குனர் மஜீத் பங்கேற்க உள்ளார் என்றார். 80களில் நடந்த கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் படத்தை கொடுக்க முடிவு செய்ததாக கூறியுள்ள சாமி, கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தை தேர்வு செய்து அங்கு படப்பிடிப்பை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

Next Story
Share it