மும்பை தொடர் குண்டு வெடிப்பு !! குற்றவாளி யூசுப் மேமன் சிறையில் மரணம்...

மும்பை தொடர் குண்டு வெடிப்பு !! குற்றவாளி யூசுப் மேமன் சிறையில் மரணம்...

மும்பை தொடர் குண்டு வெடிப்பு !! குற்றவாளி யூசுப் மேமன் சிறையில் மரணம்...
X

கடந்த 1993 ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 315 பேர் மரணமடைந்தனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ஏற்பாட்டின் கீழ் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிறைவு பெற்று , முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது தண்டனை காலத்தை நாசிக் சிறையில் கழித்து வந்தார்.

இவரது சகோதரரும் குண்டுவெடிப்புத் திட்டங்களைத் தீட்டியவருமான டைகர் மேமன் தலைமறைவாகி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இந்நிலையில் நாசிக் சிறையில் இருக்கும் குற்றவாளி யூசுப் மேமன் வெள்ளியன்று மரணம் அடைந்தார்.

அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் , உடலானது பிரேதப் பரிசோதனைக்காக துலே மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்களின் மற்றொரு சகோதரரான யாகூப் மேமன், கடந்த 2015-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Next Story
Share it