6 லட்சம் ஊழியர்களுக்கு சலுகைக் காட்டும் முகேஷ் அம்பானி..!  

 | 

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக உச்சத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. கொரோனா அச்சுறுத்து வரும்  நிலையில், இவர் தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்ததுடன், அரசுக்கும் பெரியளவு உதவி செய்துள்ளார். 

முகேஷ் அம்பானி பெட்ரோல் தொடங்கி சில்லறை வணிகம், டெலிகாம், மீடியா, கேபிள் டீவி என பல துறைகளில் தடம் பாதித்து வெற்றியும் பெற்று வருகிறார். இந்த ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் சுமார் 6,00,000 பேர், அதிகாரிகள், தொழிலாளர்கள் மட்டத்தில் பணிபுரிந்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது உலகை மிரட்டி வரும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் பலர் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தன் ஊழியர்களை நெகிழ வைக்கும் விதத்தில் ஒரு காரியத்தைச் செய்து இருக்கிறது.  

இந்த 6 லட்சம் ஊழியர்களில் ஒரு கணிசமானவர்கள் மாதம் 30,000 ரூபாய்க்குள் தான் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த 30,000 ரூபாய்க்குக் கீழ் சம்பளம் வாங்குபவர்களுக்கு மாதம் இரண்டு முறை பேமெண்ட் செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ் குழுமம்.
 
இந்த நடுத்தர மற்றும் ஏழை ஊழியர்கள், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் நிதிச் சுமையை குறைத்துக் கொள்ளவும், அவர்கள் கையில் பணம் புழங்க வேண்டும் என்பதால் இப்படி மாதம் 2 முறை பேமெண்ட் செய்கிறார்களாம்.
 

ரிலையன்ஸ் குழுமத்தில் தற்காலிக ஊழியர்களாகவும், ஒப்பந்த ஊழியர்களாகவும் இருப்பவர்களுக்கு வேலை நடந்தாலும், நடக்காவிட்டாலும், பேமெண்ட்களைக் கொடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ் குழுமம். சமீபத்தில் டாடா குழுமம் கூட தன் தற்காலிக & ஒப்பந்த ஊழியர்களுக்கு பேமெண்ட் கொடுப்பதாகச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை, மும்பை கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஒரு 100 படுக்கை கொண்ட சிறப்பு கொரோனா வைரஸ் மருத்துவமனையை செவன் ஹில்ஸ் பகுதியில் அமைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதோடு மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு ரிலையன்ஸ் குழுமம் 5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து இருக்கிறது .
 

newstm.in 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP