கள்ளக்காதல் வெறி.. பெற்ற மகளை கொன்று புதைத்த தாய் !

கள்ளக்காதல் வெறி.. பெற்ற மகளை கொன்று புதைத்த தாய் !

கள்ளக்காதல் வெறி.. பெற்ற மகளை கொன்று புதைத்த தாய் !
X

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி(30). இவர் தனது கணவரை பிரிந்து குழந்தைகளோடு வேலன் நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.  

இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி எஸ்தர் பேபி திடீரென காணாமல் போனார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் போலீசில் புகார் அளித்தனர்.

இதனிடையே, சென்னை பள்ளிக்கரணை போலீசார் சகாயராணியின் சகோதரர் சேவியர் அருண் (40) என்பவரை ஒரு கொலை வழக்கில் கைது செய்தனர். இந்த தகவல் எஸ்தர் பேபியின் தந்தை அப்துல்காசருக்கு தெரியவந்தது.

அப்போது திருப்பூர் போலீஸ் ஸ்டேசன் சென்ற எஸ்தர் பேபியின் தந்தை, சென்னையில் கைதான சேவியர் அருண் திருப்பூர் வந்திருந்தபோதுதான் தனது மகள் எஸ்தர்பேபி காணாமல் போனதாக தெரிவித்தார்.

இதையடுத்து சேவியர் அருணை காவலில் எடுத்து வீரபாண்டி போலீசார்விசாரித்தபோது,  எஸ்தர் பேபி கொலை செய்யப்பட்டு, வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டது தெரியவந்தது. எஸ்தர் பேபியின் தாய் சகாயராணிக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது எஸ்தர்பேபிக்கு தெரியவந்தது. அவர் தாயை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால், தனது தம்பி சேவியர் அருண், கள்ளக்காதலன் பாக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி எஸ்தர் பேபியை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளனர்.

இந்த வழக்கில் சகாய அருண், சகாயராணியை போலீசார் கைது செய்தனர். நேற்று காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் வீரபாண்டி பகுதியில் உள்ள எஸ்தர் பேபி வீட்டுக்கு சென்றனர். அவர் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்தனர்.

உடல் புதைக்கப்பட்டு 6 வருடங்களானதால் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன. அவற்றை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் சகாயராணியின் கள்ளக்காதலன் பாக்கியராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in 

Next Story
Share it