தமிழகம் வந்தடைந்த மேலும் 1 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் !!

தமிழகம் வந்தடைந்த மேலும் 1 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் !!

தமிழகம் வந்தடைந்த மேலும் 1 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் !!
X

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான அளவில் பிசிஆர் கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து இன்று மேலும் 1 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் இன்று தமிழகம் வந்தன. இந்த  கருவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.

பிசிஆர் கருவிகள் மூலம் தமிழகம் முழுவதும் நாள் தோறும் 35,426 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதுவரை இந்த கருவிகள் மூலம் 13,06,884 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Newstm.in

Next Story
Share it