1. Home
  2. தமிழ்நாடு

அதிக வீரியம்.. மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம்.. WHO எச்சரிக்கை !!

அதிக வீரியம்.. மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம்.. WHO எச்சரிக்கை !!


சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதோடுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து மிரட்டி வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதனை கட்டுப்படுத்த மருத்துவ உலகம் சுழன்று வரும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வீரியம்.. மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம்.. WHO எச்சரிக்கை !!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 138ஆவது அமர்வில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் கண்டுபிடிப்பு மற்றும் உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் மட்டுமின்றி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது.

அதிக வீரியம்.. மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம்.. WHO எச்சரிக்கை !!

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, அனைவருக்கும் சமமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காதது ஆகும். குறிப்பாக குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த நாடுகளில் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இதில் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் தொகைக்காவது தடுப்பூசி சென்றடைந்திருக்க வேண்டும். ஆண்டிறுதிக்குள் 40 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு மத்திய பகுதிக்குள் 70 சதவீதமாக உயர்ந்திருக்க வேண்டும், என கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like