1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா மருத்துவக் கழிவுகளை இழுத்துச் செல்லும் குரங்குகள்!

கொரோனா மருத்துவக் கழிவுகளை இழுத்துச் செல்லும் குரங்குகள்!


தனியார் பள்ளியில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பயன்படுத்திய உடைகள் மற்றும் மருந்துக் கழிவுகள் அலட்சியமாக கையாளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு கவச உடைகள் மற்றும் மருத்துவர்களின் உடைகளை குரங்குகள் வனப்பகுதிக்குள் இழுத்து செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

உதகை தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மையத்தில் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பயன்படுத்தும் சுய பாதுகாப்பு கவச உடைகள் (PPE kit) முறையாக அழிக்கப்படாமல் அலட்சியமாக கையாளப்படுவதாக தெரிகிறது.

பயன்படுத்தப்பட்ட மருத்துவ உடைகள் முறையாக அழிக்கப்படாமல், அங்கேயே வைக்கப்பட்டிருந்ததால், அவற்றை குரங்குகள் வளாகத்தில் இருந்து வெளியே தூக்கி கொண்டு வரும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. பயன்படுத்தப்பட்ட கவச உடைகள், மாத்திரை டப்பாக்கள், ஊசிகளை குரங்குகள் வனப்பகுதிக்குள் இழுத்து செல்வது சர்சையையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் இந்த உடைகளில் இருக்கும் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like