பாத்திரம் கழுவி, சப்பாத்தி போடும் குரங்கு... !
ஒரு குரங்கை வீட்டு வேலைக்கு பழக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒன்று அனைத்து வகையான வீட்டு வேலைகளையும் செய்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சத்வா கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாத். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். அவர் தங்களுடைய வீட்டில் செல்லப் பிராணியாக ஒரு குரங்கை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குரங்கு பாத்திரம் கழுவுகிறது சப்பாத்தி மாவு தேய்த்து சப்பாத்தி போடுகிறது.
அந்த குரங்கு விஸ்வநாதன் மனைவியான ராணியுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறது. இதனை அவருடைய மகன் ஆகாஷ் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
एक बंदरिया 🐒 काम वाली-
— Shahbaz Khan (@Shahbazkhan9557) December 30, 2024
यूपी के रायबरेली में रानी नाम की बंदरिया करती है घर के सभी काम,
रानी बंदरिया को बर्तन धुलना, खाना बनाना है पसंद,
खागीपुर संडवा की रानी का वीडियो सोशल मीडिया पर वायरल। @BeingSalmanKhan @kamaalrkhan @azizkavish @karishma_aziz97 @News18UP @priyarajputlive pic.twitter.com/NC3iz65w7k